விஜய் 63! - நிறைவேறாத அட்லீயின் ஆசை

’தெறி’, ‘மெர்சல்’ என்று விஜய்க்கு இரண்டு மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீ, விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். விஜயின் 63 வது படத்தை அட்லீ இயக்கப் போவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு, அப்படத்தை தயாரிப்பது ஏ.ஜி.எஸ் நிறுவனம் என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, விஜயின் மெர்சல் மிகப்பெரிய லாபம் ஈட்டிய படமாக அமைந்தாலும், அப்படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்கு காரணம், படத்தின் பட்ஜெட் என்றும், முக்கியமாக தேவையில்லாத பல செலவுகள் என்றும் கூறப்படுவதோடு, அந்த செலவுகளுக்கு அட்லீ தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவுகளை இயக்குநட் அட்லீ இழுத்துவிட்டதால் தான், படம் ஹிட்டாகியும் தயாரிப்பாளரால் லாபம் பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தற்போது விஜய் 63 படத்தை இயக்க இருக்கும் அட்லீ மீது தயாரிப்பு தரப்பு ரொம்ப கவனமாக இருப்பதோடு, அவர் எது கேட்டாலும், பல முறை ஆலோசித்து தான் தருகிறார்களாம்.
இந்த நிலையில், தனது முதல் படமான ‘ராஜா ராணி’ படத்தில் நயந்தாராவை ஹீரோயினாக்கிய அட்லீ, தான் இயக்கிய இரண்டு விஜய் படங்களிலும் நயந்தாராவையே ஹீரோயினாக்க முயற்சித்தாராம். ஆனால் அது முடியாமல் போனதால், இந்த முறை எப்படியாவது நயந்தாராவை ஹீரோயினாக்க வேண்டும் என்பதால், படத்தின் ஹீரோயினாக அவரை தேர்வு செய்திருக்கிறார். இயக்குநரின் தேர்வு மட்டும் இன்றி, தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயந்தாரா, படத்தில் இருந்தால் படத்திற்கு பிளஸாக இருக்கும் என்று நினைத்து தயாரிப்பு தரப்பு நயந்தாராவை அனுகியிருக்கிறார்கள்.
விஜயுடன் ஜோடி சேர ஓகே சொன்ன நயந்தாரா, அதற்கு சம்பளமாக ரூ.6 கோடி வரை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நயந்தாராவின் இந்த தொகையை கேட்டவுடன் ஷாக்கான தயாரிப்பு தரப்பு, வேறு ஹீரோயினை பாருங்க, என்று அட்லீயிடம் கூறிவிட்டார்களாம். அவரும் தனது பங்குக்கு தயாரிப்பு தரப்பிடம் பல முறை பேசினாலும், பட்ஜெட்டை அதிகரிக்கும் எந்த விஷயமாக இருந்தாலும், அதை தவிர்ப்பதில் குறியாக இருக்கும் தயாரிப்பு நிறுவனம், ஹீரோயின் விஷயத்தில் கராராக இருக்கிறார்களாம்.