விஜயிடம் தோற்றுப் போன ரஜினி! - கைவிட்ட ‘2.0’

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கும் ‘2.0’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம் சுமார் ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் புரோமோஷன்களையும் தயாரிப்பு தரப்பு மிகப்பெரிய அளவில் செய்திருப்பதோடு, படம் மிகப்பெரிய அளவில் வசூலையும் ஈட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான விஜயின் ’சர்கார்’ படத்துடன் போட்டி போட்ட ரஜினியின் 2.0 தோற்றுப் போன தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் 2.0 படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. மிகப்பெரிய ஓபனிங்கோடு முன்பதிவு தொடங்கப்பட்டாலும், இந்த ஆண்டின் சிறப்பான முன்பதிவை பெற்ற படங்களின் வரிசையில் 2.0 இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறதாம். முதல் இடத்தில் விஜயின் ‘சர்கார்’ இருப்பதாக அந்த தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.
என்னதான் பிரம்மாண்டமான படமாக உருவாகினாலும், ரஜினியின் 2.0 படம், விஜயின் ‘சர்கார்’ படத்தை முந்த முடியாத தகவல் ரஜினி ரசிகர்களை கவலைக்கொள்ள செய்துள்ளது.