Dec 08, 2018 12:26 PM

சம்பள பாக்கி வைத்த விஜய் பட தயாரிப்பாளர்! - வீடியோ லீக்

சம்பள பாக்கி வைத்த விஜய் பட தயாரிப்பாளர்! - வீடியோ லீக்

கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான விஜயின் ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் பெரும் லாபம் ஈட்டியது. இருந்தாலும் அப்படத்தால் படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு பெருத்த நஷ்ட்டம் என்றே கூறப்படுகிறது.

 

மெர்சல் படத்தினால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் லாபம் பார்த்தாலும், படத்தின் பட்ஜெட் அதிகரித்ததால், படம் வெற்றி பெற்றும் கூட தேனாண்டாள் நிறுவனத்திற்கு நஷ்ட்டமே ஏற்பட்டதாம்.

 

இந்த நிலையில், மெர்சல் படத்தில் பணியாற்றிய மேஜிக் கலைஞர் ஒருவருக்கு ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் இன்னமும் சம்பளம் செட்டில் செய்யவில்லையாம். படத்தில் மேஜிக் நிபுணராக நடித்திருக்கும் விஜய்க்கு, மேஜிக் கலையை சொல்லிக் கொடுத்த அவர், தனது சம்பளத்தை கேட்கும் அந்த நபரை, இதோ...அதோ...என்று ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் அலைய விடுகிறதாம்.

 

இதனால் பொருத்து பொருத்து பார்த்த அந்த மேஜிக் கலைஞர், ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்திடம் தனது சம்பள பாக்கியை கேட்கும் தொலைபேசி உரையாடலை சமூக வலைதளத்தில் லீக் செய்துள்ளார்.

 

இதோ அந்த வீடியோ,