Dec 24, 2018 05:16 PM
இதில் விஜய் தான் எப்போதும் முதலிடம்! - அடித்து சொல்லும் பிரபலம்

தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் நடிகரான விஜய்க்கு, நாளுக்கு நாள் பெரிய அளவில் மாஸ் கூடிக்கொண்டே போகிறது. அவரது படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்து வருகிறது.
இந்த ஆண்டில் டிவிட்டரில் தேடப்பட்ட இந்திய பிரபலங்களின் பட்டியலில் டாப் 10 பட்டியலில் விஜய் இடம் பிடித்ததோடு, அவரது பாடல்கள் சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில், சில விஷயங்களில் விஜய் எப்போதும் முதலித்தில் இருப்பார், அவரை வெல்ல யாராலும் முடியாது, என்று பிரபல ஜோதிடர் கூறியுள்ளார்.
ஜோதிட பிரபலம் ரத்தன் பண்டிட் என்பவர் போட்டி, பிரபலம், வெற்றி, மகிழ்ச்சி போன்ற விசயங்களில் விஜய் தான் முதலிடத்தில் இருப்பார், என்று சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.