விஜயின் சாதனையை முறியடித்த விஜய் சேதுபதி!

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என ஒவ்வொரு காலக்கட்டத்தில் இரண்டு உச்ச நடிகர்கள் தமிழ் சினிமாவை ஆட்கொண்டிருந்தாலும், அவ்வபோது இவர்களையும் மிஞ்சும் அளவுக்கு சில நடிகர்களும் வந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவில் விஜய், அஜித் ஆகியோர்களது வரிசையில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரம் தொடர் வெற்றிகளை கொடுப்பதோடு, வசூலிலும் சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், விஜயின் ‘பைரவா’ படம் செய்த சாதனையை விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படம் முறியடித்திருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
பைரவா படத்தின் டிரைலர் யுடியுபில் வெளியாகி தற்போது வரை 2.4 லட்சம் லைக்குகள் வாங்கியிருப்பது தான் சாதனையாக இருந்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு வெளியான ‘செக்க சிவந்த வானம்’ பட டிரைலர் 2.6 லட்சம் லைக்குகள் பெற்று ‘பைரவா’ சாதனையை முறியடித்திருக்கிறது.
விஜயின் படங்கள் தொடர்ந்து சாதனைக்கு மேல் சாதனை நிகழ்த்தி வந்த நிலையில், முதல் முறையாக அவரது சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ‘செக்க சிவந்த வானம்’.