பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் விஜய் கருத்து!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. இதில் வெற்றியாளராக நடிகை ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது தேர்வுக்கு ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
முதல் சீசன் நிகழ்ச்சி போல இரண்டாம் சீசன் நிகழ்ச்சி சுவராஸ்யமாக இல்லை, என்பது பலரது கருத்தாக இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த விஜய் டிவி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் வையாபுரியிடம் பேசியிருக்கிறாராம். சமீபத்தில், சர்கார் படப்பிடிப்பு தளத்தில் விஜயை வையாபுரி சந்தித்துள்ளார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி எப்படி போகுதுனு, கேட்ட விஜய், குழந்தைகள் பார்க்கும் போது நானும் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன், என்றும் கூறினார்.
மேலும், தனது படத்தில் வையாபுரிக்கு நிச்சயம் வாய்ப்பு தருவதாகவும் விஜய் உறுதியளித்திருக்கிறாராம்.