ஊரடங்கில் ஏற்பட்ட விபத்து! - பலத்த காயமடைந்த டிடி

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் சூப்பர் ஸ்டார், என்று சொல்லும் அளவுக்கு தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை கொண்டிருப்பவர் டிடி. தொகுப்பாளினியாக இருந்த இவர் தற்போது வெள்ளித்திரை நடிகையாகவும் உயர்ந்திருக்கிறார். ‘ப.பாண்டி’ படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் டிடி நடித்து வருகிறார்.
தற்போது ஊரடங்கினால் அனைத்து பிரபலங்களும் வீட்டில் இருந்தாலும், அவ்வபோது தங்களைப் பற்றிய தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில், டிடி சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த விஷயம் அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆம், டிடி-க்கு விபத்து ஏற்பட்டு, அதில் அவர் பலத்த காயமடைந்திருக்கிறார். அவரது காலில் முறிவு ஏற்பட்டு தற்போது நடக்க முடியாத நிலையில், பெரிய கட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்.
விபத்து பற்றிய தகவல் மற்றும் அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் டிடி-யின் நிலையைப் பார்த்து அவரது ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,