Oct 01, 2018 10:31 AM
‘பரியேறும் பெருமாள்’ படம் குறித்து விஜய் என்ன சொன்னார் தெரியுமா?

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை ரசிகர்கள், ஊடகங்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினர் பாராட்டி வருகிறார்கள்.
கதிர், ஆனந்தி என படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களின் நடிப்பையும் ஊடகங்கள் வெகுவாக பாராட்டி வருகின்றது.
இந்த நிலையில், நடிகர் விஜய் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்க்க ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஹீரோ கதிருக்கு போன் செய்து அவரை வெகுவாக பாராட்டிய விஜய், படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுடன் பேசுகிறேன், என்று கூறினாராம்.