Mar 24, 2021 05:47 PM

7 மொழிகளில் வெளியாகும் விஜய் ஜேசுதாஸ் படம்

7 மொழிகளில் வெளியாகும் விஜய் ஜேசுதாஸ் படம்

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான விஜய் ஜேசுதாஸ் ஹீரோவாக நடித்திருக்கும் 3டி படம் ‘சால்மன்’. 7 மொழிகளில் வெளியாகும் இப்படம் தமிழில் ‘வர்தா’ என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.

 

ரொமாண்டிக் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஷலீல் கல்லூர் இயக்கியுள்ளார். ஷஜூ தாமஸ், ஜோஸ், ஜோய்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் ஜேசுதாஸுக்கு ஜோடியாக ஜொனிடா நடித்துள்ளார்.

 

இப்படத்தின் முதல் பாடல்வரி வீடியோ பாடல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இரண்டாவது பாடல்வரி வீடியோவான “நீ போகும் வழி எங்கும் செண்பகபூவாய் நானிருப்பேன்...” என்ற பாடல் விஜய் ஜேசுதாஸ் பிறந்தநாளில் வெளியாகி வைரலாகி வருகிறது.