Sep 12, 2018 10:26 AM

மயக்கமடைந்த விஜயலட்சுமி, கதறிய மும்தாஜ் - காரணம் சினேகன்

மயக்கமடைந்த விஜயலட்சுமி, கதறிய மும்தாஜ் - காரணம் சினேகன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஓல்டு போட்டியாளர்கள், தற்போது இரண்டாம் சீசனில் நுழைந்திருக்கிறார்கள். சினேகன் தலைமையில் வையாபுரி, ஆர்த்தி, காயத்ரி, சுஜா வாருணி என பழைய போட்டியாளர்கள் 5 பேர், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறார்கள்.

 

பிக் பாஸ் சீசன் 2 முடியும் தருவாயில் உள்ள நிலையில், புதிதாக நுழைந்திருக்கும் பழைய போட்டியாளர்களால் அவ்வபோது சில பரபரப்பான சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. இவை அனைத்திற்கும் சினேகன் தான் காரணகர்த்தாவாக இருக்கிறார்.

 

இந்த நிலையில், இன்றைய எப்பிசோட்டில், மும்தாஜை சினேகன் கதற கதற அழை வைக்கும் எப்பிசோட் புர்மோ வெளியாகியுள்ளது. கமலுக்கு மும்தாஜ் மரியாதை கொடுப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ள நிலையில், அது குறித்து மும்தாஜியிடம் பேசும் சினேகன், அவரிடம் நடத்தும் பாடத்தால் ஒரு கட்டத்தில் மும்தாஜ் குழந்தையை போல தேம்பி தேம்பி அழ தொடங்கிவிடுகிறார்.

 

இது பருக்கம் இருக்க, பாலாஜி, சினேகன் ஆகியோர் பலூனை வைத்து ஏதோ விளையாட்டு விளையாட, அந்த நேரத்தில் அங்கு வரும் விஜயலட்சுமியை சினேகன் இடித்து தள்ள, நிலைகுலைந்து கீழே விழும் விஜயலட்சுமி மயக்கமடைந்துவிடுகிறார். அவருக்கு ரத்த காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், மயக்க நிலையிலே அவர் இருக்கிறார்.

 

சினேகனின் அதிரடி நடவடிக்கையால் பிக் பாஸ் சீசனில் பரபரப்பு தொற்றிக் கொள்ள, இந்த இரண்டு பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால், இன்றைய எப்பிசோட் மிகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.