Dec 28, 2018 06:25 AM

அஜித்தின் மற்ற படங்களுக்கு கிடைக்காத அங்கீகாரத்தை பெற்ற ‘விஸ்வாசம்’

அஜித்தின் மற்ற படங்களுக்கு கிடைக்காத அங்கீகாரத்தை பெற்ற ‘விஸ்வாசம்’

சிவா இயக்கத்தில் அஜித் தொடர்ந்து நான்காவது முறையாக நடித்திருக்கும் ‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. அஜித் - சிவா கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான மூன்று படங்களைக் காட்டிலும் இப்படம் சற்று வித்தியாசமாக, அதாவது முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

படத்தில் ஹீரோயினாக நயந்தாரா நடிக்க, விவேக், தம்பி ராமையா, ரமேஷ் திலக், யோகி பாபு, ரோபோ ஷங்கர், அனிகா, கோவை சரளா, மதுமிதா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இப்படி அஜித்தை மட்டும் நம்பால், காமெடியையும் நம்பியே இந்த படத்தை சத்யயோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரித்திருக்கிறார். அதாவது, ‘விவேகம்’ படத்தின் மூலம் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாகவே அவர் இந்த படத்தை தயாரித்திருப்பதால், எந்த விதத்திலும் ரிஸ்க் எடுக்கவில்லை.

 

இப்படி ரசிகர்களுக்காக உருவாகியிருக்கும் இந்த படம், இதுவரை எந்த ஒரு அஜித் படத்திற்கும் கிடைக்காத அங்கீகாரத்தை பெற்றிருப்பது தான் தற்போதைய சிறப்பு. ஆம், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் ‘விஸ்வாசம்’ வெளியாகிறது. இந்த நாடுகளில் வெளியாகும் அஜித்தின் முதல் படம் ‘விஸ்வாசம்’ தான். அதுமட்டும் இன்றி, இந்த நாடுகளில் அதிக இடங்களில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.