விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

’மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் வெளியான நாள் முதல் சர்கார் மீது பலரது பார்வை பட்டுக்கொண்டிருக்கிறது.
விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி சர்கார் படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், படத்தின் ரிலீஸ் தேதியையும் அன்றே வெளியிட்டிருந்தார்கள். மேலும், ஆகஸ்ட் இறுதியில் சர்கார் படம் குறித்து மேலும் சில சர்பிரைஸ் விஷயங்களை அறிவிப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஆகஸ்ட் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கையில், இன்று மாலை ‘சர்கார்’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது.
விஜய் ரசிகர்களுக்கான இன்ப அதிர்ச்சியாக தெரிவித்திருக்கும் இந்த சர்ப்பிரைஸ் அநேகமாக படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி குறித்த தகவலாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.