‘100’, ‘அயோக்யா’ படங்கள் இன்று ரிலீசானது!

இந்த வாரம் வெள்ளிக்கிழமை 8 திரைப்படங்கள் வெளியாக இருந்த நிலையில் சில பல பிரச்சினைகளால் பெரும்பாலான படங்கள் வெளியாகாமல் போனது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதிலும், விஷால், அதர்வா போன்ற முக்கிய நடிகர்களின் படங்களே ரிலீஸாகாமல் போனது பெரும் அதிர்ச்சியளித்தது.
அதர்வா முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் ‘100’ போலீஸ் கண்ட்ரோல் ரூமை மையப்படுத்திய சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் ரசீகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பத்திரிகையாளர்களும் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்கள்.
இப்படம் 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்த நிலையில், வழக்கின் மூலம் வெளியாகமல் போனது. பிறகு பிரச்சினை தீர்ந்து 10 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், அன்றைய தினமும் படம் வெளியாகதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது.
இந்த நிலையில், அனைத்து பிரச்சினைகளும் முடிந்து ‘100’ இன்று வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இப்படம் இன்று வெளியானதோடு, அட்வான்ஸ் புக்கிங்கிலும் பட்டையை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல், விஷாலின் ‘அயோக்யா’ படமும் 10 ஆம் தேதி வெளியாகவில்லை. படத்தின் ரிலீஸிற்காக நடந்த பஞ்சாயத்து அதிகாலை வரை நீடித்த நிலையில், இன்று படம் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
ஆக, முக்கிய படங்களாகவும், ரசிகர்கள் எதிர்ப்பார்த்த படங்களாகவும் இருந்த அதர்வாவின் ‘100’ மற்றும் விஷாலின் ‘அயோக்யா’ படங்கள் இன்று (மே 11) வெளியாகிவிட்டது.