”100 ஆண்கள், 2 பெண்கள்”! - நடிகை வசுந்தராவின் பரபரப்பு பேட்டி

விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமான ‘தென்மேற்கு பருவக்காற்றில்’ ஹீரோயினாக நடித்தவர் வசுந்தரா. இவர் தற்போது ‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். மேலும், பல தமிழ்ப் படங்களில் நடித்து வருபவர், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.
இந்த நிலையில், சினிமாவில் பெண்களின் நிலை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வசுந்தரா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஒரு பெண் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் நீண்ட காலம் இருப்பது என்பது மிக கடினம், என்று கூறியிருக்கும் வசுந்தரா, நயன்தாரா எல்லாம் எப்படி தான் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இப்போதாவது பரவாயில்லை, இதற்கு முன்பெல்லாம் பட ஷூட்டிங் நடக்கிறது என்றால் அங்கு 100 ஆண்கள் இருப்பார்கள், ஆனால் நடிகை, நடிகை அம்மா என இரு பெண்கள் மட்டும் தான் இருப்பாங்க.
காடுகளில் படப்பிடிப்பு நடக்கும்போது நம்மளுடன் நடிகைகளும் வருகிறார்கள் என்று கழிப்பிடத்திற்கு தயார் எல்லாம் எல்லா தயாரிப்பாளர்களும் செய்வதில்லை. அந்த மாதிரியான நேரங்களில்(மாதவிடாய்) நாங்கள் இயக்குநரிடம் விஷயத்தை சொன்னாலும் அது எல்லா இயக்குநருக்கும் புரியாது, என்று தனது ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.