Feb 24, 2026 04:46 PM

நடன இயக்குநர் ராபின் இயக்கும் ‘வருத்துப் போக்கு’!

நடன இயக்குநர் ராபின் இயக்கும் ‘வருத்துப் போக்கு’!

பாக்ஸ் மூவிஸ் சார்பில் மது தயாரிப்பில் வின்சி பிரான்சிஸ் திரைக்கதையில், மலையாள சினிமா நடன இயக்குநர் ராபின் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வருத்துப் போக்கு’. இப்படத்தில் நாயகனாக சிபு நடிக்க, நாயகியாக அனிஷா நடிக்கிறார், இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பணிக்கர்,நெல்சன்  மற்றும் பலர் நடிக்கின்றனர். அம்ப்ரோஸ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

 

இப்படத்தின் வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் ராபில் படம் பற்றி கூறுகையில், “கதாநாயகன் சிபு  தன் காதலியோடும் நண்பர்களோடும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்.  திடீரென்று ஒரு நாள் அவனுக்கு தீராத நோய் ஒன்று இருப்பது தெரிய வருகிறது.

இதனால் தான் விரைவில் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில், நண்பர்களையும் காதலையும் விட்டு விலகி மொரிசியஸ் செல்கிறான்.

 

Varuthu Pokku

 

நண்பன் காணாமல் போனதால் எங்கே என்று நண்பர்கள் தேட ஒரு வழியாக அவன் வெளிநாடு சென்றிருப்பது தெரிய வருகிறது. நண்பர்களும் அவனது காதலியும் அவனைத் தேடி மொரிசியஸ் செல்கிறார்கள். அங்கே  நாயகனை சந்தித்தார்களா அவன் உயிருடன் மீண்டானா என்பதை நட்பும் காதலும் கலந்து சொல்லும் ஒரு உணர்வுபூர்வமான கதை தான் இப்படம்.” என்றார்.

 

இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் மொரிசியசில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து  கேரளா மற்றும் பெங்களூரில் அடுத்தடுத்த படப்பிடிப்பு நடைபெற உள்ளது.