Jun 10, 2020 02:04 PM

15 வயதினிலே... - வைரலாகும் டிடியின் புகைப்படம்

15 வயதினிலே... - வைரலாகும் டிடியின் புகைப்படம்

தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டவராக திகழ்பவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. ரசிகர்கள் மட்டும் இன்றி திரை பிரபலங்களின் பேவரைட் தொகுப்பாளினியாக வலம் வரும் இவர், தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

 

கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும், டிடி-யை பல திரைப்படங்களில் பார்க்கலாம். தற்போதைய ஊரடங்கு நாட்களை தனது விட்டில் தனிமையில் கழிக்கும் டிடி, சோசியல் மீடியா மூலம் எப்போதும் ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருப்பதோடு, தனது பழைய புகைப்படங்கள் மற்றும் நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார். அப்படி டிடி பகிரும் பல விஷயங்கள் டிரெண்டாகி வருகிறது.

 

Vijay TV DD

 

அந்த வகையில், கடந்த 2004 ஆம் ஆண்டு, ராதிகாவின் ராடன் மீடியா நிறுவனம் தயாரிப்பில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர் ‘செல்வி’. இந்த தொடரில் டிடி முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்தார். தொடரின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்ற போது, டிடி-யும் பங்குக்கொண்டார். அப்போது அவர் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

அதற்கு காரணம், டிடி அந்த புகைப்படம் எடுக்கும் போது அவருக்கு 15 வயது. அந்த இளம் பருவத்தில், பாவாடை தாவணியில் கொல்லை அழகுடன் இருக்கும் டிடி- இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் லைக் போடுவதோடு, “அப்பவே வேற லெவல் அழகு” என்று வர்ணிக்கவும் செய்கிறார்கள்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

DD in 15 years old