Jun 13, 2019 06:54 AM

விந்தியாவுக்கு 200 ஏக்கரில் மாந்தோப்பு! - ஜெயலலிதாவுக்கு மாம்பழ படையல்

விந்தியாவுக்கு 200 ஏக்கரில் மாந்தோப்பு! - ஜெயலலிதாவுக்கு மாம்பழ படையல்

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான நடிகை விந்தியாவை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை என்றாலும், தேர்தலின் போது அதிமுக பிரசாரக் கூட்டங்களில் பார்க்கலாம். ஜெயலலிதாவுக்காகவும், அதிமுக-வுக்காகவும் பீரங்கி குண்டாக செயல்பட்டு வந்தவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வை கடுமையாக விமர்சித்தார்.

 

இதற்கிடையே, இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக விந்தியாவை அதிமுக தலைமை மீண்டும் அழைக்க, ஜெயலலிதா சமாதியில் மண்டியிட்டு வணங்கிய பின்னரே தனது பிரசாரத்தை தொடங்கினார்.

 

இந்த நிலையில், மீண்டும் ஜெயலலிதா சமாதிக்கு சமீபத்தில் வந்திருந்த விந்தியா கூடை கூடியாக மாம்பழங்களை எடுத்து வந்து ஜெயலலிதா சமாதியில் வினோத படையல் வைத்திருக்கிறார்.

 

Actress Vindhya

 

என்னடா இது, ஜெயலலிதாவின் நினைவு நாளும் இல்லை, பிறந்தநாளும் இல்லை, விந்தியாவுக்கு அப்படி எதுவும் இல்லை, தேர்தலும் இல்லை, பிறகு எதற்காக விந்தியா ஜெயலலிதா சமாதிக்கு வந்திருக்கிறார், அதுவும் மாம்பழக் கூடைகளோடு, என்று அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்க, ஜெயலலிதா சமாதியில் வைக்கப்பட்ட படையல் மாம்பழங்களை எடுத்து, அங்கிருந்த மக்களிடம் விந்தியா வழங்கியுள்ளார்.

 

Vindhya Mango

 

திடீரென்று ஜெயலலிதா சமாதியில் விந்தியா மாம்பழ படையல் வைத்தது குறித்து விசாரிக்கையில், விந்தியாவுக்கு ஆந்திரா அருகே சந்திரகிரியில் 200 ஏக்கரில் மாம்பழ தோட்டம் இருக்கிறதாம். இங்கு விளையும் மாம்பழங்களை வருடம் வருடம் ஜெயலலிதாவுக்கு அனுப்பு வைப்பாராம்.

 

நடிகையாக பெரிய அளவில் சம்பாதிக்காத விந்தியா, அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளராகவும், ஜெயலலிதாவின் தீவிர அனுதாபியாகவும் மாறிய பிறகே இந்த 200 ஏக்கர் மாம்பழ தோட்டம் உள்ளிட்ட சொத்துக்கள் சேர்ந்ததாம். இதனால் தான், நன்றி மறவாமல் அவர் ஜெயலலிதாவுக்கு ஆண்டு தோறும் தனது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை அனுப்பு வைப்பாராம். ஆனால், இந்த முறை தனது தோட்டத்தில் நல்ல விளைச்சல் இருந்தும், அதனை அவரால் ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. எனவே, தான் ஜெயலலிதா சமாதியில் மாம்பழ படையல் வைத்தாராம்.

 

Vindhya Mango

 

இந்த படையல் இனி வருடம் வருடம் தொடரும் என்றும் விந்தியா கூறியிருக்கிறார்.