Feb 18, 2020 04:14 AM

அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென்று இயக்குநர் ஏ.எல்.விஜயை அமலா பால் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது, என்று இயக்குநர் விஜயின் குடும்பத்தார் திட்டவட்டமாக கூறிய பிறகும் அமலா பால் நடிக்க தொடங்கினார்.

 

அதன்படி, தனுஷ் தயாரித்த ‘அம்மா கணக்கு’ படத்தில் நடிக்க ஆரம்பத்த அமலா பால், அப்படம் ரிலீஸாகும் போது, இயக்குநர் விஜயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்ததோடு, நீதிமன்றம் மூலம் விவாகரத்தும் வாங்கிவிட்டார். மேலும், தனக்கு ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம், விவாகரத்து கொடுத்தால் போதும், என்றும் அமலா பால் கோரிக்கை விடுத்தார்.

 

விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அமலா பால், பல படங்களில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த இயக்குநர் விஜயின் தந்தை, விஜய் - அமலா பால் விவாகரத்துக்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்றும், அவர் தயாரித்த ‘அம்மா கணக்கு’ படத்தில் நடித்த பிறகே அமலா பால் நடவடிக்கையில் மாற்றம், ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், இயக்குநர் விஜயின் தந்தையின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை அமலா பால், விவாகரத்து என்பது எனது சொந்த முடிவு, அதற்கு யாரும் காரணமும் இல்லை, பொறுப்பும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவருடன் எனக்கு திருமணம் நடக்க இருக்கிறது, அது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன், என்றும் அமலா பால் தெரிவித்துள்ளார்.