40 வயது நடிகையின் சர்ச்சை திருமணம்! - தன்னைவிட 14 வயது குறைவான வாலிபரை மணக்கிறார்

நடிகர், நடிகைகள் சிலர் பல வகைகளில் சர்ச்சைகளில் சிக்குவது போல திருமண விஷயத்திலும் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குகிறார்கள். அந்த வகையில், பிரபல நடிகை ஒருவர் தன்னை விட 14 வயது குறைவான வாலிபரை திருமணம் செய்யப் போவது சினிமா உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுஷ்மிதா சென். ‘ரட்சகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான இவர், ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதோடு தமிழ் சினிமாவுக்கு குட் பை சொல்லியவர் தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது நாகர்ஜூனாவின் ‘ரக்ஷகாடு’ என்ற படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கும் சுஷ்மிதா சென், தன்னைவிட 14 வயது குறைவான வாலிபரை திருமணம் செய்ய உள்ளார்.
தற்போது 40 வயதாகும் சுஷ்மிதா சென், ரோஹ்மன் ஷாவால் என்ற இளைஞரோடு லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தவர், தற்போது அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம்.
சுஷ்மிதா சென் - ரோஹ்மன் ஷாவால் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாக பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது.