May 06, 2021 04:03 PM

கொரோனாவால் பலியான நடிகர் பாண்டு பற்றிய சர்ச்சையால் பரபரப்பு

கொரோனாவால் பலியான நடிகர் பாண்டு பற்றிய சர்ச்சையால் பரபரப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காமெடி நடிகர் பாண்டு, இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

 

இந்த நிலையில், உயிரிழந்த நடிகர் பாண்டு பற்றிய உருவான சர்ச்சையால் தமிழ் திரையுலகில் மட்டும் இன்றி அதிமுக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

அதாவது, ஓவியரான நடிகர் பாண்டு, ’கேப்பிடல் லெட்டர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்நிறுவனம் மூலம், பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் பெயர் பலைகளை வடிவமைத்து கொடுப்பதோடு, நிறுவனங்களுக்கான லோகோவும் டிசன் செய்து கொடுத்து வந்தார்.

 

பாண்டுவின் இறப்பு பற்றிய செய்தியில் சில ஊடகங்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை நடிகர் பாண்டு தான் வடிவமைத்தார், என்று குறிப்பிட்டன.

 

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்தது நடிகர் பாண்டு அல்ல, பிரபல சினிமா கலை இயக்குநர் அங்கமுத்து தான், என்று தெரிவித்தார்கள். இதனால், திரையுலகிலும், அதிமுக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இது குறித்து பல தரப்புகள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில், இது தொடர்பாக இனி எந்த விவாதமும் வேண்டாம், என்று கேட்டுக்கொண்ட தென்னிந்திய நடிகர்கள் சங்கம், நடிகட் பாண்டு இறப்பு செய்தியில், அவர் அதிமுக கொடியை வடிவமைத்துக் கொடுத்தார், என்று குறிப்பிட வேண்டாம், என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.