Mar 05, 2019 04:05 PM

ஜானகி தேவியாக மாறிய ‘96’!

ஜானகி தேவியாக மாறிய ‘96’!

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘96’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தமிழில் படத்தை இயக்கிய பிரேம்குமார் தான் தெலுங்கு ரீமேக்கையும் இயக்குகிறார்.

 

தெலுங்கு ரீமேக்கில் திரிஷா வேடத்தில் சமந்தாவும், விஜய் சேதுபதி நடித்த வேடத்தில் சர்வானந்தும் நடிக்கிறார்கள். 

 

இந்த நிலையில், இப்படத்திற்கு ‘ஜானகி தேவி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாம்.