Jun 03, 2019 03:19 PM

’ஆடை’ யால் ஏற்பட்ட அசிங்கம்! - அப்செட்டில் அமலா பால்

’ஆடை’ யால் ஏற்பட்ட அசிங்கம்! - அப்செட்டில் அமலா பால்

ஆரம்பத்தில் சிறு சிறு படங்களில் நடித்த அமலா பால் ‘சிந்து சமவெளி’ என்ற சர்ச்சையான படத்தில் நடித்ததன் மூலம் சற்று பிரபலமானதையடுத்து ‘மைனா’ வெற்றி மூலம் பிரபல நடிகையானவர், இயக்குநர் விஜயால் விஜய், சூர்யா, விக்ரம் ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர், திடீரென்று திருமணம் செய்துக் கொண்டு நடிப்பதை நிறுத்தியவர், பிறகு விவாகரத்து பெற்று விட்டு மீண்டும் நடிக்க வந்தார்.

 

விவாகரத்துக்குப் பிறகு நடிக்க வந்த அமலா பால், கவர்ச்சி காட்டுவதில் தாரளம் காட்டுவதோடு, தமிழ் மட்டும் இன்றி பாலிவுட் பக்கமும் போக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

 

இந்த நிலையில், அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடை’ படம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பும் வகையில் படு ஆபாசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இப்படத்தின் இயக்குநர் ரத்னகுமார், சென்சாரில் படத்திற்கு ஏ சான்றிதழ் தான் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், யு அல்லது யு/ஏ கிடைத்தால் சேட்டிலைட் மற்றும் பிற நாடுகளில் ரிலீஸ் செய்வது உள்ளிட்ட வியாபாரத்திற்கு உதவியாக என்பதால்  தயாரிப்பு தரப்பு சென்சார் குழுவினரிடத்தில் யு அல்லது யு/ஏ சான்றிதழ் எதிர்ப்பார்ப்பதாக கூறியிருக்கிறார்கள்.

 

படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், ”இப்படி ஒரு படம் எடுப்பதற்கு பதிலாக நீங்க செக்ஸ் படத்தையே எடுத்திருக்கலாம். இதுல யு அல்லது யு/ஏ சான்றிதழ் வேற கேக்குறீங்களா” என்று இயக்குநரிடம் கோபப்பட்டதோடு, சில காட்சிகளை வெட்டி எறிந்த பிறகும் ஏ சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும், என்று கூறிவிட்டார்களாம்.

 

Amala Paul in Aadai

 

இப்படத்தின் பஸ்ட் லுக் வெளியான போதே பெரும் சர்ச்சை ஏற்பட்டதோடு, பலர் அமலா பாலை விமர்க்கவும் செய்தார்கள். உடனே இது தொடர்பாக விளக்கம் அளித்த அமலா பால், “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது சிலிர்த்தேன். புதுமாதிரியான படமாக இருக்கும்.” என்றார். 

 

தற்போது ‘ஆடை’ படத்தை சென்சார் அதிகாரிகள் இப்படி தாறுமாறாக விமர்சித்திருப்பதை கேள்விப்பட்ட அமலா பால், ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.