May 08, 2019 07:24 PM

ஆதியை தடகள விளையாட்டு வீரராக மாற்றிய அறிமுக இயக்குநர்!

ஆதியை தடகள விளையாட்டு வீரராக மாற்றிய அறிமுக இயக்குநர்!

ஆக்‌ஷன், காமெடி, பேண்டஸி, டிராமா என்று பலதரப்பட்ட படங்களில் நடித்து வரும் ஆதி, தற்போது தடகள விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படத்தில் விளையாட்டு வீரராக நடித்து வருகிறார்.

 

அறிமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் இப்படத்தை பிஎம்எம் ஃபிலிம்ஸ் மற்றும் கட்ஸ் & குளோரி ஸ்டுடியோஸ் ஜி மனோஜ், ஜி ஸ்ரீஹர்ஷா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

 

இப்படம் குறித்து இயக்குநர் பிரித்வி ஆதித்யா கூறுகையில், ”நான் ஸ்கிரிப்ட்டை, கதாபாத்திரத்தை எழுதி முடித்த உடனே அந்த கதாபாத்திரத்தில் ஆதி சாரை தான் நினைத்து கற்பனை செய்து பார்த்தேன். தடகள வீரருக்கு தேவையான கட்டுமஸ்தான உடலை அவர் கொண்டிருப்பது தான் முதன்மையான காரணம். ஸ்கிரிப்ட் முடிந்ததும், நான் அவரை சந்தித்து ஸ்கிரிப்டை விவரிக்க முடிவு செய்தேன். அவரது அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் இருந்தன, இது நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இறுதியாக, இந்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவது என்னை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது, மிகச் சிறப்பான படத்தை கொடுக்க முயற்சி செய்வேன். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. 

 

Director Prithvi Aadhitya

 

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக விளையாட்டு அடிப்படையிலான திரைப்படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, ஆனால் இந்த படம் அதில் இருந்து விதிவிலக்கானது. இது 'தடகள' விளையாட்டு உலகில் நடக்கும் கதை, தனது கனவுகளை  நிறைவேற்ற கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் ஒரு படம்.” என்றார்.

 

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராகுல் படத்தொகுப்பு செய்ய, வைரபாலன் கலையை நிர்மாணிக்கிறார்.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி கதாநாயகி ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

 

ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார் தவிர்த்து, படத்தொகுப்பாளர் ராகுல் மற்றும் கலை இயக்குனர் வைரபாலன் ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐபி கார்த்திகேயன்.