Jul 20, 2018 11:34 AM

அஞ்சலியால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து - காயமடைந்த இயக்குநர்

அஞ்சலியால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து - காயமடைந்த இயக்குநர்

பிரபல ஒளிப்பதிவாளரும், மதுரை வீரன் பட இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் ‘லிசா’. 3டி ஹாரார் படமாக உருவாகும் இதில் அஞ்சலி ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படத்தில் ஹீரோவாக ஷாம் நடித்திருக்கிறார். மெலும், பாலிவுட்டின் பிரபல நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

 

ராஜு விஸ்வநாத் என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படம் தான், அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் உருவாகும் முதல் ஹாரார் படம். 

 

இந்த நிலையில், இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. 3டி எபெக்ட்டில் தோசைக்கல்லை தூக்கி கேமரா முன் அஞ்சலி வீச வேண்டும். ஆக்சன் என்றதும் அஞ்சலி கல்லை வீச, அது எதிர்பாரதவிதமாக கேமரா அருகில் இருந்த இயக்குநரின் நெத்தியில் விழுந்து, அவரது புருவம் கிழிந்தது.

 

காயமடைந்து வலியால் துடித்த இயக்குநர், அந்த நேரத்திலும் ஷாட் எப்படி வந்திருக்கிறது என்பதை பார்த்துவிட்டு பிறகு தான் மருத்துவமனைக்கு சென்று காயத்திற்கு சிகிச்சை மேற்கொண்டார். இந்த சம்பவத்தால் நேற்றைய படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.