Feb 27, 2019 06:22 AM

படப்பிடிப்பில் விபத்து! - நடிகர் சம்பத் ராம் மருத்துவமனையில் அனுமதி

படப்பிடிப்பில் விபத்து! - நடிகர் சம்பத் ராம் மருத்துவமனையில் அனுமதி

ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருப்பவர் சம்பத் ராம். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ‘தட்றோம் தூக்குறோம்’, ‘காஞ்சனா 3’ உள்ளிட்ட பல படங்கள் சம்பத் ராம் நடிப்பில் வெளியாக உள்ளது.

 

பிரபு சாலமன் இயக்கத்தில், ராணா நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படத்தில் சம்பத் ராம் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், சம்பத் ராம், ராணா மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட இருந்தது. முன்னதாக சண்டைக்காட்சிக்கான ஒத்திகையில் சம்பத் ராம் ஈடுபட்ட போது, எதிர்பாரத விதமாக அவர் நெஞ்சில் அடிபட்டுள்ளது. உடனடியாக படப்பிடிப்புக் குழுவினர் அவருக்கு முதலுதவி செய்ய, சம்பத் ராமும் அப்போதைக்கு சமாளித்துக் கொண்டு தனது போஷனை முடித்துக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

 

இந்த நிலையில், நெஞ்சில் அடிபட்டு சுமார் 15 நாட்களுக்கு பிறகு சம்பத் ராமுக்கு, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட, அதனை தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றவருக்கு தனது இரத்தம் கட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டு, ஊசி மூலம் இரத்த உரைதலை சரி செய்துள்ளார்கள்.

 

தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ள சம்பத் ராம், இன்னும் சில தினங்களில் எப்போதும் போல படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள இருக்கிறார். அதேபோல், பிரபு சாலமன் படத்திலும் இவருக்கான போஷன் இன்னும் இருப்பதால், அப்படத்தின் படப்பிடிப்பிலும் விரைவில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.

 

Sampath Ram and PRO Govindaraj

 

சம்பத் ராமுக்கு ஏற்பட்ட இந்த உடல் நலக்குறைவை அறிந்த இயக்குநர் பிரபு சாலமன், ரொம்பவே வருத்தப்பட்டிருக்கிறார். விபரத்தை அறிந்ததும் திரையுலக பிரபலங்கள் பலர் சம்பத் ராமை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.