Feb 10, 2019 08:22 AM
அப்பாவான நடிகர் செண்ட்ராயன்!

’ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’, ‘மூடர் கூடம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் செண்ட்ராயன். ஜீவா நடித்த ‘ரெளத்திரம்’ படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அவர், பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியின் மூலமாகவும் பிரபலமடைந்தார்.
இதற்கிடையே, பல வருடங்களாக தனக்கு குழந்தை இல்லை என்று செண்ட்ராயன் வருத்தத்தில் இருந்த நிலையில், கடந்த வருடம் அவரது மனைவி கர்ப்பமானார். இதையடுத்து சந்தோஷமடைந்த செண்டார்யனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்ததால் செண்ட்ராயன் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறாராம். குழந்தைக்கு பல பிரபலங்கள் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.