May 02, 2019 11:46 AM

வாய்ப்புக்காக வாணி போஜன் எடுத்த அதிரடி முடிவு!

வாய்ப்புக்காக வாணி போஜன் எடுத்த அதிரடி முடிவு!

சினிமாவுக்கு நிகராக சின்னத்திரை நட்சத்திரங்களும் தற்போது ரசிகர்களிடம் பிரபலமாகி விடுகிறார்கள். அதிலும், மக்களிடம் வரவேற்பு பெறும் சீரியலில் நடிக்கும் நடிகைகள் தங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக் கொண்டு, அவர்களுடன் அவ்வபோது சமூக வலைதளங்களில் லைவாக பேசுவதோடு, அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருகிறார்கள்.

 

இப்படி மக்களிடம் பாப்புலாராக இருக்கும் இவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் எளிதில் கிடைத்துவிடுகிறது. அதில் வெற்றி பெற்று வெள்ளித்திரை நாயகியாகவும் வலம் வருகிறார்கள்.

 

அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜன், தற்போது சீரியல்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் வைபவ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், சினிமாவில் நிலைத்து நிற்க நடிகைகள் சற்று கவர்ச்சியாக நடிப்பதும் அவசியமான ஒன்று என்பதை புரிந்துக் கொண்ட வாணி போஜன், கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்க ரெடி, என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

அதே சமயம், தற்போடுள்ள இளைஞர்கள் கவர்ச்சியை விட ஹோம்லியை தான் அதிகம் விரும்புகிறார்கள், என்று கூறியவர், கவர்ச்சி என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல, சிரிப்பு மற்றும் முகம் சார்ந்த விஷயமும் கூட, என்றும் அவர் கூறியிருக்கிறார்.