Feb 13, 2019 09:37 AM

எந்த ஹீரோவும் செய்யாததை செய்த ஆரி! - குவியும் வாழ்த்து

எந்த ஹீரோவும் செய்யாததை செய்த ஆரி! - குவியும் வாழ்த்து

நடிப்பதுடன், சமுதாயத்திற்கு பல நல்ல செயல்களை செய்து வரும் நடிகர்களில் வளர்ந்து வரும் நடிகரான ஆரியும் ஒருவர். அதிலும், விவசாயிகளின் நலனுக்காகவும், சுற்று சூழல் பாதுகாப்பிற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆரியின் சமீபத்திய செயல் ஒன்று பெரும் பாராட்டுப் பெற்று வருகிறது.

 

அதாவது, நேற்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ஆரி, எல்லோரும் செய்வது போல கேக் வெட்டாமல், அதற்கு பதிலாக இளநீர் வெட்டி அனைவருக்கும் கொடுத்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

 

தற்போது ஆரி நடித்து வரும் ‘அலேகா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நேற்று தனது பிறந்தநாளை ஆரி கொண்டாடியுள்ளார். அப்போது படக்குழு 5 கிலோவில் கேக் ஒன்றை வாங்கி அதை வேட்டுமாறு ஆரியிடம் கூற, இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆரி, செயற்கை உணவான கேக்கை நிராகரித்துவிட்டு, அதற்கு பதிலாக இயற்கை உணவான இளநீரை படக்குழுவினர் அனைவரும் வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

 

ஆரியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்பவர்களைக் காட்டிலும், அவர் பிறந்தநாள் கொண்டாடிய விதத்திற்கு தான் பலர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள். 

 

க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் பி.தர்மராஜ் மற்றும் கிரியேட்டிவ் டீம்ஸ் இ.ஆர்.ஆனந்தன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அலேகா’ படத்ஹ்டை ‘அய்யனார்’ புகழ் எஸ்.எஸ்.ராஜா மித்ரன் இயக்குகிறார். சத்யா இசையமைக்கிறார். தில் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராம் படத்தொகுப்பு செய்கிறார். யுகபாரதி, விவேகா மற்றும் லாவரதன் பாடல்கள் எழுதுகிறார்கள். பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடிக்கிறார்.

 

Actor Aari and Aishwarya Dutta