Jan 29, 2019 10:26 AM

மனைவியின் இரண்டாவது திருமணத்தை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர்!

மனைவியின் இரண்டாவது திருமணத்தை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர்!

முன்னாள் மனைவியின் இரண்டாவது திருமணத்தை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் ஒருவர், தனது மனைவி குறித்து அசிங்கமாக சமூக வலைதளத்தில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

மலையாள டிவி தொடர்கள் மூலம் பிரபலமானவர் அம்பிளி தேவி. பிரபலமான சீரியல் நடிகையான இவர் சமீபத்தில் நடிகர் ஜெயன் ஆதித்தியனை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். ஆதித்யனுக்கு இது நான்காவது திருமணமாகும்.

 

இந்த நிலையில், அம்பிளி தேவியின் இரண்டாவது திருமணம் குறித்து கேள்விப்பட்ட அவரது முதல் கணவரான நடிகர் லோயல், படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அத்துடன் சமூக வலைதள பக்கத்தில் மனைவியின் திருமணம் குறித்து லைவாக கமெண்ட் தெரிவித்தவர், “தனது தொல்லை ஒழிந்தது” என்றும் கூறியிருக்கிறார்.

 

Ambili Devi

 

லோயலின் இத்தகைய செயலுக்கும், அவரது கருத்தும் பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.