Jun 11, 2019 10:01 AM
நடிகர் கிரேஸி மோகன் உடல் தகனம் செய்யப்பட்டது

பிரபல நகைசுவை நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன், திடீர் நெஞ்சுவலியால் நேற்று உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
ஏராளமான திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் கிரேஸி மோகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தார்கள்.
இன்று காலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் கிரேஸி மோகனின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஊர்வலம் காலை 11.00 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நிறைவடைந்ததும் அங்கு கிரேஸி மோகன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது.