Mar 07, 2020 07:13 AM

க.அன்பழகனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு - நடிகர் துரை சுதாகர் இரங்கல்

க.அன்பழகனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு - நடிகர் துரை சுதாகர் இரங்கல்

திமுக பொதுச்செயாளர் பேராசிரியர் க.அன்பழகன், வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால், கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துவிட்டார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், பேராசிரியர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

நடிகரும், தொழிலதிபருமான துரை சுதாகர், பேராசிரியர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”ஆசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், சமூக சீர்த்திருத்தவாதி என பன்முகம் கொண்ட பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு தமிழகத்திற்கு பேரழிப்பாகும்.

 

அரசியலில் கலைஞர் கருணாநிதிக்கு தோழராக தோள் கொடுத்தவர், அவருக்கு பிறகு கழக தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுத்ததோடு, செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினை தலைவராக்கி, திமுக-வை மேலும் வலுப்பெற செய்தார்.

 

தமிழக அரசியலின் மூத்தவராக திகழ்ந்தவர், திராவிட கொள்கைகளின் முழக்கமாக ஒலித்துக் கொண்டிருந்த முக்கியமானவராகவும் திகழ்ந்தார். அவரது மறைவு தமிழக அரசியலுக்கும், தமிழகத்திற்கும் இழப்பு என்றாலும், அவரது எண்ணங்களும், சிந்தனைகளும் திமுக தொண்டர்களுக்கு எப்போதும் உற்சாகத்தை கொடுக்கும்.

 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.