Oct 08, 2019 06:01 PM

கபடி வீரர்களை ஊக்குவித்த நடிகர் துரை சுதாகர்!

கபடி வீரர்களை ஊக்குவித்த நடிகர் துரை சுதாகர்!

‘களவாணி 2’ படத்தில் வில்லனாக அறிமுகமானாலும் டெல்டா மாவட்ட மக்களின் ஹீரோவான நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகார், அடுத்ததாக வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து ’டேனி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

நடிப்பது மட்டும் இன்றி திரைப்படம் தயாரிப்பதிலும் ஈடுபட்டிருக்கும் பப்ளிக் ஸ்டார், ஏழை மக்களுக்கும், மாணவர்களுக்கும் அவ்வபோது பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருவதோடு, விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.

 

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி, பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் என்ற ஊரில், பெருந்தலைவர் காமராஜர் நினைவு சுழற்கோப்பை கபடி போட்டி தொடர் நடைபெற்றது. மின்னோளி போட்டியான இத்தொடரில் பல இளைஞர்கள் கலந்துக்கொண்டு விளையாடினார்கள்.

 

இந்த கபடி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சுழற்கோப்பையும், காசோலையும் வழங்கினார்.

 

Public Star Durai Sudhkar

 

இந்த பிஸியான சமயமத்திலும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக, போட்டிகள் சிலவற்றை முழுமையாக பார்த்து வீரர்களுக்கு உற்சாகம் அளித்த நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ”விளையாட்டு என்பது நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, வாழ்க்கையில் விடாமுயற்சியையும் நமக்கு கற்றுக்கொடுக்கும். எனவே, இளைஞர்களும், மாணவர்களும் விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்த வேண்டும். குறிப்பாக கபடி போன்ற நம் மண்ணின் விளையாட்டை நாம் வளர்க்க வேண்டும். எனவே, கபடி போட்டிகள் எங்கு நடந்தாலும் சரி, அப்போட்டிக்கும் அதில் பங்கு பெறும் வீரர்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளை நான் செய்துக் கொண்டு இருப்பேன்” என்று நிகழ்ச்சியில் பேசியதோடு, இந்த கபடி தொடரை நடத்திய இந்திரகாந்தி யூத் பவுண்டேஷன் அமைப்புக்கும், சகோதரர் கே.மகேந்திரனுக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, இளைஞர்களுக்காக இத்தகைய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக நன்றியும் தெரிவித்தார்.

 

Public Star Durai Sudhakar Kabbadi