Feb 05, 2020 08:26 AM
நடிகர் ஈரோடு கே.கே.பி.பாலகிருஷ்ணன் மரணம்!

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘நாடோடிகள்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கே.கே.பி.கோபாலகிருஷ்ணன். அப்படத்தில் சசிகுமாரின் மாமா வேடத்தில் நடித்த இவர், அரசு பணியில் இருப்பவருக்கு தான் தனது பெண்ணை திருமணம் செய்துக் கொடுப்பேன், என்று கூறி சசிகுமாருக்கு பெண் கொடுக்க மறுத்துவிடுவார். இவரது கதாப்பாத்திரமும், நடிப்பும் பாராட்டு பெற்றது.
நாடோடிகள் படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்தவர், சமீபத்தில் வெளியான ‘நாடோடிகள் 2’ படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் ஈரோடு கே.கே.பி.கோபாலகிருஷ்ணன், இன்று காலை மரணம் அடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.