நடிகர் பிரபாஸுக்கு திருமணம்! - பெண் யார் தெரியுமா?

’பாகுபலி’ படத்திற்குப் பிறகு இந்திய நட்சத்திரமாக மாறிய தெலுங்கு நடிகர் பிரபாஸ், தற்போது ‘சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாக உள்ள இப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையே, பிரபாஸ் திருமணம் குறித்து அவ்வபோது கிசுகிசுகள் வெளியான நிலையில், தற்போது அவருக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. தொழிலதிபர் ஒருவரது மகளை தான் பிரபாஸ் மணக்கப் போகிறாராம். அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறாராம்.
பிரபாஸின் திருமணம் குறித்து அவரது சகோதரி பிரகதி பேட்டி ஒன்றில் கூறுகையில், ”உங்களை போல நாங்களும் அவரது திருமணத்திற்காகத்தான் காத்திருக்கிறோம். அவர் படங்களில் பிசியாக இருப்பதால் தேதி சரியாக தெரியவில்லை. ஆனால் அவரது திருமணதை நாங்கள் பெரிய அளவில் கொண்டாடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ‘சஹோ’ படம் வெளியாக உள்ளது. அப்படம் வெளியான பிறகு பிரபாஸின் திருமண தேதி மற்றும் மணப்பெண் குறித்த விபரங்களை அவரது குடும்பத்தார் அறிவிக்க இருப்பதாகவும், தெலுங்கு சினிமாவில் பேசப்பட்டு வருகிறது.