Jul 30, 2019 06:52 PM

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! - பெண் யார் தெரியுமா?

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்! - பெண் யார் தெரியுமா?

பிரபல இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இளைய மகனும், இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி, நடிகர் மற்றும் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

 

வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரேம்ஜி, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்ட்டி’ படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். 

 

எப்போதும் ஜாலியாக இருக்கும் பிரேம்ஜி, பேட்டிகளில் கூட ஓபனாக பேசும் பழக்கம் உடையவர். 40 வயதாகும் பிரேம்ஜிக்கு திருமணம் ஆகவில்லை, என்று அவர் கவலைப்பட்டதை விட, ரசிகர்களும், அவரது நண்பர்களும் தான் அதிகமாக கவலைப்பட்டனர்.

 

பிரேம்ஜிக்கு அவரது குடும்பத்தார் பெண் தேடி வந்த நிலையில், தற்போது அவருக்கு பெண் கிடைத்துவிட்டதாம். விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறாராம்.

 

இதை பிரேம்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ஆணும், பெண்ணும் திருமணக்கோலத்தில் நிற்கும் புகைப்படத்துடன் ‘கேம் ஓவர்” என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை போட்டுக்கொண்டு எடுத்திருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இதையடுத்து, பிரேம்ஜிக்கு திருமணத்திற்கு பெண் கிடைத்துவிட்டது என்றும், அவருக்கு விரைவில் திருமணம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருபவர்கள், பெண் யார்? என்றும் பிரேம்ஜியிடம் கேட்டு வருகிறார்கள்.