Mar 21, 2020 04:37 AM

பயப்பட தேவையில்லை! - கொரோனா விழிப்புணர்வு பணியில் துரை சுதாகர்

பயப்பட தேவையில்லை! - கொரோனா விழிப்புணர்வு பணியில் துரை சுதாகர்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசஸ் தாக்கத்தினால் பலியானவர்கள் எண்ணிக்கை உலகம் முழுவதிலும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுமார் 160 க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கியிருக்கும் கொரோனாவின் தாண்டவம் தற்போது இந்தியாவிலும் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களை விட, அதன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகாக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளினால், தினக்கூலிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இருந்தாலும், மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில், இத்தகைய நவடிக்கை அவசியமே, என்பதை புரிந்துக் கொண்டு மக்கள் ஒத்துழைப்பதோடு, பிரபலங்கள் பலரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தின் முக்கிய நபரான நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், கொரோனா பற்றிய விழிப்புணர்வை அம்மண்ணின் மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.

 

‘களவாணி 2’ படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமான துரை சுதாகர், தொழிலதிபர், நடிகர் என்பதை தாண்டி, தஞ்சை மக்களுக்காக பல நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளும் முக்கியமானவர் என்பதை தமிழகமே அறியும். அந்த வகையில், தஞ்சை மாவட்டத்தில் பல சமூக பணிகளை மேற்கொண்டு வரும் நடிகர் துரை சுதாகர், தனது ரசிகர் மன்றம் மூலம் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்து வந்ததோடு, சமீபத்தில் நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா குறித்து உலக தமிழர்களுக்கு தெரியப்படுத்திய மகத்தான பணியை தனது ரசிகர் மன்றம் மூலம் செய்தார்.

 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பாமர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தஞ்சை மாவட்டம் முழுவதும் நடிகர் துரை சுதாகர் ரசிகர் மன்றத்தினர் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் துரை சுதாகர், ”பயப்பட வேண்டாம், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை சரியான முறையில் கடைபிடித்தால் போதும். கொரோனா நம்மை அண்டாது.” என்று பதிவிட்டுள்ளார்.