Apr 25, 2019 09:44 AM

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு நடிகர் ரோபோ சங்கர் பரிசு அறிவிப்பு

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு நடிகர் ரோபோ சங்கர் பரிசு அறிவிப்பு

தற்போது நடந்து முடிந்த ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தந்தை இழந்து வறுமையில் வாடிய போதும், தனது லட்சியப் பயணத்தை தொடர்ந்து ஓட்டப் பந்தயத்தில் தொடர் பயிற்சியை மேற்கொண்ட கோமதியின் வெற்றியை தமிழகமே கொண்டாடி வருகிறது.

 

தங்கம் வென்றாலும், இதுவரை கோமதிக்கு அரசு சார்பில் எந்த ஒரு பரிசு அறிவிப்போ அல்லது விருதோ அறிவிக்கப்படாமல் இருப்பது, தமிழர்களை கவலைய செய்தாலும், அந்த கவலையை போக்கும் விதத்தில் காமெடி நடிகர் ரோபோ சங்கர், கோமதிக்கு பரிசு அறிவித்து அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

 

மாணவி கோமதிக்கு நடிகர் ரோபோ சங்கர் ரூ.1 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார். கோமதியை பாராட்டும் அனைவரும் ரோபோ சங்கரின் இத்தகைய செயலுக்கும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

 

Gomathi