Apr 24, 2019 02:12 PM

’காஞ்சனா 3’ நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர் கைது! - பரபரப்பில் கோலிவுட்

’காஞ்சனா 3’ நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர் கைது! - பரபரப்பில் கோலிவுட்

சமீபகாலமாக சினிமா துறையில் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. நடிகைகள் கூறும் பாலியல் புகார்களுக்கு சில ஆதரவு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகைகளின் பாலியல் புகார்களை விசாரிக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் சமீபத்தில் வெளியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காஞ்சனா 3’ நடிகையை விளம்பர நடிகர் ஒருவர் படுக்கைக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

’காஞ்சனா 3’ வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்க, முக்கிய வேடம் ஒன்றில் ஜானே கட்டாரியா என்பவர் நடித்திருக்கிறார். ரஷ்ய நாட்டை சேர்ந்த இவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமித் கட்டாரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

 

மாடல், வி.ஜே ஆகிய பணிகளை செய்து வரும் ஜானே, தற்போது சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

 

Jane Katariya and Ragava Lawrance

 

இதை அறிந்த சென்னையை சேர்ந்த விளம்பர நடிகர் ரூபேஷ் என்பவர், ஜானேவை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

 

அவரை விளம்பர படங்களில் நடிக்க வைப்பதாக கூறி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பிறகு விளம்பர படங்களில் நடிக்க வைக்க தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும், என்று ரூபேஷ் கூற அதற்கு ஜானே மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

Jane Katariya

 

இதனால், நடிகை ஜானேவின் புகைப்படங்களை ஆபாசமாக மாபிங் செய்த ரூபேஷ், அதை ஜானேவின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பி, சம்மதிக்கவில்லை என்றால், புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன், என்று மிரட்டியுள்ளார்.

 

இதையடுத்து, சென்னை போலீஷ் கமிஷ்னர் அலுவலகத்தில் ஜானே புகார் அளித்திருக்கிறார். புகாரை விசாரித்த போலீசார், ரூபேஷை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

 

Rupesh