Jul 24, 2018 01:13 PM

சிக்ஸ் பேக் வைக்கும் சூரி! - எதற்காக தெரியுமா?

சிக்ஸ் பேக் வைக்கும் சூரி! - எதற்காக தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உள்ள சூரியின் காமெடிக் காட்சிகள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் வெளியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கூட சூரியின் காமெடி பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ளது.

 

இந்த நிலையில், ‘சீமராஜா’ படத்திற்காக சூரி சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விக்ரம் தெரிவித்திருக்கிறார். ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘சாமி 2’ படத்தில் சூரி நடித்து வருகிறார்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சூரி குறித்து பேசிய விக்ரம், சீமராஜா படத்திற்காக சூரி சிக்ஸ் பேக் வைத்தார். ஆனால், அவரது சிக்ஸ் பேக்கை படத்தில் காட்டவில்லை. அதனால், சூரியின் சிக்ஸ் பேக்கை நான் மட்டும் தான் பார்த்தேன், என்று காமெடியாக பேசினார்.