Jul 26, 2018 06:23 PM

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையப் போகும் விஜய்!

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையப் போகும் விஜய்!

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 2, முதல் பாகத்தைப் போல விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இல்லை என்றே கூறப்படுகிறது. அதனால், எப்படியாவது இனி வரும் எப்பிசோட்களை விறுவிறுப்பாக்க போட்டியாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா பங்கேற்க போகிறாராம். அதுவும் சட்டை இல்லாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் நுழையப் போகிறாராம்.

 

Vijay Devarakonda

 

விஜய் தேவரகொண்டா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘கீதா கோவிந்தம்’ படத்திற்கான விளம்பரத்திற்காக தான் விஜய், பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறாராம். இருந்தாலும், அவர் மூலம் சற்று நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக அவரை சட்டையில்லாமல் வரவேற்க பிக் பாஸ் போட்டியாளர்கள் காத்திருக்கிறார்களாம்.