Aug 06, 2019 05:58 PM

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் மரணம்

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் மரணம்

நாடகம் மற்றும் திரைப்பட நடிகரான ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.

 

பத்ம சேஷாத்ரி பள்ளியின் நிர்வாகியான ராஜலட்சுமி பார்த்தசாரதி, சிறந்த எழுத்தாளர் ஆவார். அவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்துள்ளது.

 

இன்று மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜலட்சுமி, சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 

அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள பாரத் கலாச்சாரில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அவரது இறுதிச் சடங்கு நாளை மாலை 4 மணிக்கு பெசண்ட் நகர் மயானத்தில் நடைபெற இருப்பதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.