Jul 30, 2018 12:10 PM

நடிகர் யோகி பாபுக்கு திருமணம்!

நடிகர் யோகி பாபுக்கு திருமணம்!

அமீர் ஹீரோவாக நடித்த ‘யோகி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான யோகி பாபு, தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உருவெடுத்திருக்கிறார்.

 

விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வரும் யோகி பாபு, ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயந்தாராவை ஒன்சைடாக காதலிப்பது போன்ற பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட் ஆனது. இதன் மூலம் அப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், நடிகர் யோகி பாபுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. அவரது பெற்றோர் அவருக்கு பெண் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். பெண் கிடைத்தவுடன் திருமணம் தான், என்று தனது பாணியில் சொல்லும் யோகி பாபு, கோடி ரூபாய் கொடுத்தாலும் ஹீரோவாக நடிக்க மாட்டேன், என்று கூறியிருக்கிறார்.