May 25, 2020 11:17 AM

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சோகக்கதை!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சோகக்கதை!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார். ‘காக்க முட்டை’ படத்தின் மூலம் பிரபலமான இவர் ‘கனா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே கவனிக்க வைத்தார்.

 

தனது சினிமா பயணத்தில் பல தடைகளை கடந்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கடந்தகால வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட தடைகள் பற்றி திருச்சி டெட் எக்ஸ் கருத்தரங்கில் பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறத்.

 

அந்த நிகழ்வில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “சென்னையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் நான். குடிசைப்பகுதி வீட்டு வசதி அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வந்தோம். நான், அப்பா, அம்மா, மூன்று அண்னன்கள் என 6 பேர் கொண்ட குடும்பம்.

 

எனக்கு 8 வயது இருக்கும் போது அப்பா இறந்து விட்டார். அம்மா எல்.ஐ.சி ஏஜெண்டாக பணியாற்றி எங்களை காப்பாற்றினார். எனக்கு 12 வயது இருக்கும் போது மூத்த அண்ணன் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்துக் கொண்டார். அவரது மரணம் தற்கொலையா, கொலையா என்பது கூட தெரியவில்லை. இரண்டாவது அண்ணன் சம்பாதிக்க தொடங்கிய போது விபத்தில் இறந்துவிட்டார். மகன் குடும்பத்தை பார்த்துக் கொள்வார் என்று அம்மா நினைக்கும் போது, அண்ணன் இறந்தது எங்களுக்கு பெரிய இடியாக இருந்தது.

 

நான் வேலைக்கு போக தொடங்கினேன். சீரியல்களில் நடிக்க தொடங்கினேன். முதலில் குறைவாக சம்பளம் கொடுத்தார்கள். பிறகு ஒரு நாளைக்கு ரூ.1500 கொடுத்தார்கள் மாதத்தில் 6 நாட்கள் தான் படப்பிடிப்பு இருக்கும்.

 

மானாட மயிலாட நிகழ்ச்சியில் பெற்ற வெற்றியைக் கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடினேன். “உனக்கு ஹீரோயின் முகம் இல்லை, அதனால் சிறு சிறு வேடங்களில் நடி, டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்” என்று என் முகத்திற்கு நேராகவே பலர் கூறினார்கள். 

 

2,3 வருடங்களுக்கு பிறகு அட்ட கத்தி படத்தில் நடித்தேன். பிறகு ‘பண்ணையாரும் பத்மினியும்’, ’ரம்மி’ போன்ற படங்களில் நடித்தேன். அதன் பிறகு கிடைத்த ‘காக்க முட்டை’ படம் தான் எனவது வாழ்க்கையை மாற்றியது. ‘வட சென்னை’, ‘தர்மதுரை’ போன்ற படங்கள் மூலம் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

 

எனக்காக யாரும் சிபாரிசு செய்வதில்லை, வாய்ப்பும் அளிப்பதில்லை. என் திறமையை மட்டுமே நம்புகிறேன். என் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகளும் எனக்கு கிடைக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.