அம்மாவான நடிகை எமி ஜாக்சன்! - குழந்தைக்கு என்ன பெயர் தெரியுமா?

‘மதராஸப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான இங்கிலாந்து மாடல் அழகியான எமி ஜாக்சன், தொடர்ந்து ‘தங்கமகன்’, ‘தெறி’, ‘2.0’, ‘ஐ’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, சில இந்தி மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்தவர், ஹாலிவுட் டிவி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் இந்திய சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார்.
இதற்கிடையே, இங்கிலாந்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவருக்கும், எமி ஜாக்சனுக்கும் இடையே காதல் மலர்ந்து, இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக இருந்த நிலையில், எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். எமிக்கும், ஜார்ஜுக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருந்தார்கள்>
இந்த நிலையில், எமி ஜாக்சனுக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அவர் ஏற்கனவே தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் குழந்தையை எமி ஜாக்சன் வைத்திருக்க, அவருக்கு ஜார்ஜ் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், எமி ஜாக்சன், ஜார்ஜ் ஜோடி தங்களது குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.