Jun 10, 2019 07:43 AM

பிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கும் நடிகை அனுபமா!

பிரபல கிரிக்கெட் வீரரை காதலிக்கும் நடிகை அனுபமா!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன், பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை காதலிப்பதாக தகவல் கசிந்துள்ளது.


தனுஷின் ‘கொடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், மலையாளப் படம் ‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்ததோடு, தெலுங்கு சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.


இதற்கிடையே, திடீரென்று நடிப்புக்கு ஓய்வு கொடுத்தவர், தற்போது துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். விரைவில் படம் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன், இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.


தற்போது உலகக்கோப்பை விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழும் பும்ப்ராவும், அனுபமா பரமேஸ்வரனும் காதலிப்பதாக மலையாள மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.


Bumrah


இவர்களது இந்த காதல் கிசுகிசுக்கு காரணம், இருவரது ட்விட்டர் பக்கம் தான். பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் 25 பேரை மட்டுமே பாலோ செய்கிறார். அதில் பலர் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் பக்கங்கள் இருக்க, நடிகை அனுபமா பரமேஸ்வரனையும் அவர் பாலோ செய்கிறார். மேலும், அவர் பாலோ செய்யும் ஒரே ஒரு நடிகை அனுபமா மட்டுமே.


அதேபோல், அனுபமா பரமேஸ்வரனும் கிரிக்கெட் வீரர் பும்ராவை பாலோ செய்வதோடு, அவர் போடும் ட்விட்டுக்கு லைக்கும் போட்டு வருகிறார்.


இப்படி ட்விட்டர் மூலம் நண்பர்களாக இருக்க, இதனை வைத்து இருவரும் காதலிப்பதாக கொளுத்தி போட்டிருக்கிறார்கள். தற்போது இது பெரும் செய்தியாக உருவெடுத்திருக்கிறது.