இயக்குநரின் கட்டுப்பாட்டில் நடிகை அதுல்யா!

தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணான அதுல்யா, சில குறும்படங்கள் நடித்து அதன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். ‘காதல் கண் கட்டுதே’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், ’ஏமாளி’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் நடித்தவர், ’நாடோடிகள் 2’ மற்றும் ‘வட்டம்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, ஜெய் நடிப்பில் வெளியான கேவலமான ஒரு படத்தில் நடித்து தனது பெயரை டேமேஜ் செய்துக் கொண்டிருக்கும் அதுல்யா, குறித்து மற்றொரு தகவல் கோலிவுட்டில் தீயாக பரவுகிறது.
அதாவது, இயக்குநரும் நடிகருமானவருடைய இரண்டு படங்களில் நடித்திருக்கும் அதுல்யா ரவி, அவரது கட்டுப்பாட்டில் தான் தற்போது இருப்பதாக கூறப்படுகிறது. தனது அனைத்து படங்களிலும் அட்வைஸ் செய்து வரும் அந்த இயக்குநர் நடிகரின் அனுமதி இல்லாமல் அதுல்யாவால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் பேசும் பெண் தான் தனது படத்திற்கு ஹீரோயினாக வேண்டும், என்று கருதிய அறிமுக இயக்குநர் ஒருவர் அதுல்யாவிடம் தேதி கேட்க, அவரோ அந்த இயக்குநரை தான் கேட்க வேண்டும், நான் முடிவு எடுக்க முடியாது, என்று கூறிவிட்டாராம்.
அதுல்யாவில் பதிலை கேட்ட அந்த அறிமுக இயக்குநர் தற்போது மலையாள கரையோரம் ஹீரோயினை தேடிக் கொண்டிருந்தாலும், அவரால் வெளியிடப்பட்ட அதுல்யா பற்றிய தகவல், தற்போது கோடம்பாக்கத்தில் வைரலாகி வருகிறது.a