Jan 30, 2019 10:12 AM

நடிகை பானுப்ரியா கைது? - கோலிவுட்டில் பரபரப்பு

நடிகை பானுப்ரியா கைது? - கோலிவுட்டில் பரபரப்பு

80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த பானுப்ரியா, தற்போது அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், 14 வயது சிறுமியை தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தி பானுப்ரியா கொடுமை படுத்துவதாகவும், அவரது சகோதரர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், சிறுமியின் அம்மா ஆந்திர மாநில காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

மேலும், மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் கொடுப்பதாக கூறி தனது மகளை அழைத்து சென்ற பானுப்ரியா, இதுவரை எந்த ஊதியமும் கொடுக்காமல் இருப்பதோடு, தனது மகளை கொடுமை படுத்துவதாகவும் தெரிவித்திருப்பவர், அவரது சகோதரர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும். கூறியிருக்கிறார்.

 

ஆனால், இந்த புகாரை மறுத்த பானுப்ரியா, சிறுமி தனது வீட்டில் திருடியதை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம், அதனால் தான் எங்கள் மீது வீன் பழி சுமத்துகிறார்கள், என்று விளக்கம் அளித்தார்.

 

இதற்கிடையே, சென்னையில் உள்ள பானுப்ரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமி சந்தியாவை மீட்ட, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், அவரை குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்ப்படுத்தினார்கள். அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அந்த சிறுமி தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பானுப்ரியாவை கைது செய்து நடவடிக்கை எடுக்க, ஆந்திர குழந்தைகள் நலத்துறை, அம்மாநில டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், 14 வயதுடைய சிறுமியை வீட்டில் வேலை அமர்த்தியது சட்டப்படி குற்றம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

எனவே, நடிகை பானுப்ரியா எந்த நேரத்திலும் ஆந்திர மாநில போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கோலிவுட்டில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.