கொரோனாவுடன் போராடும் மக்கள்! - கிளுகிளுப்பில் போட்டி போடும் நடிகைகள்

ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, தற்போது தமிழகமே கொரோனா பிடியில் தவித்துக் கொண்டிருக்கும் போது சினிமா நடிகைகளுக்குள் கிளுகிளுப்பு போட்டி படுஜோராக நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் மட்டும் அல்ல, திரைத்துறையும் கூட கொரோனா பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திரைத்தொழிலாளர்கள் பலர் சாப்பாட்டுக்கே கஷ்ட்டப்படும் நிலை கூட உருவாகலாம் என்ற கருத்து நிலவுகிறது. அவர்களுக்கு பலர் உதவி செய்தாலும், அந்த உதவி அவர்களின் தேவையை எத்தனை நாட்கள் பூர்த்தி செய்யும்? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.
இந்த நிலையில், சில கோலிவுட் நடிகைகள் தற்போதைய கொரோனா காலத்தில் தங்களது கவர்ச்சி மூலம் விளம்பரம் தேடுவதற்காக, சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்யவில்லை என்றாலும், அவர்களின் துன்பத்தையும், துயரத்தையும் வெளி உலகிற்கு காட்ட வேண்டியதை செய்யாமல், தங்களது உடல் பாகங்களை காட்டி விளம்பரம் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கினால் இளைஞர்கள் ஸ்மார்ட்போனை உபயோகிப்பது அதிகமாக இருக்கும் என்பதாலும், சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவார்கள் என்ற எண்ணத்திலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகள், தற்போது இதில் யார் பெரியவர், என்று போட்டி போட தொடங்கியுள்ளார்கள்.
அந்த வகையில், பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்ட சாக்ஷி அகர்வால் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட, அவருக்கு போட்டியாக ரேஷ்மா சமீபகாலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். இப்போது இவர்களுக்கு போட்டியாக அதுல்யா ரவியும் இந்த கிளுகிளுப்பு போட்டியில் களம் இறங்கியுள்ளார்.
ஹோம்லியான வேடங்களில் நடிக்க தொடங்கிய அதுல்யா ரவி, தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்ட ரெடி, என்பதை கோடம்பாக்கத்திற்கு அறிவிக்கும் விதமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தொடங்கி விட்டார்.
கொரோனா பிரச்சினை தொடங்கிய போது சில நடிகர், நடிகைகள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறேன், என்று சொல்லிக் கொண்டு தங்களது அன்றாட வாழ்க்கைகளை வீடியோவாக வெளியிட்டு மக்களை வெறுப்பேற்றியது போல, தற்போது நடிகைகள் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் கடுப்பேற்ற செய்கின்றது.
இதோ அந்த புகைப்படங்கள்,




