மூத்த அரசியல் தலைவருக்கு தூதுவிடும் காயத்ரி ரகுராம்!

சில படங்களில் ஹீரோயினாக நடித்த காயத்ரி ரகுராம், திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். பிறகு விவாகரத்து பெற்றவர் மீண்டும் நடிக்க தொடங்கியதோடு, நடன இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பல சர்ச்சைகளை எதிர்கொண்டவர், திடீரென்று பா.ஜ.க-வில் இணைந்தார். அரசியலில் நுழைந்ததும் மோடிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்தவர், பா.ஜ.க-வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசியலில் இருந்து விலகுகிறேன், என்று அறிவித்த காயத்ரி ரகுராம், நிறைய விஷயங்களை வெளியில் இருந்து கற்றுக்கொள்ள போகிறேன், என்றும் தெரிவித்தார்.
இந்த நிலைஹில், அரசியல் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பா.ஜ.க-வில் இருந்து விலகவில்லை, என்று தெரிவித்திருப்பதோடு, பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன், என்று தனது ஆசை தெரியப்படுத்தியும் இருக்கிறார்.