நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி! - ஆடியோவால் பரபரப்பு

கடந்த ஆண்டு சின்னத்திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, நடிகர் ஈஸ்வர், நடிகை மகாலக்ஷ்மி கள்ளத் தொடர்பு விஷயம் தான். இவர்களிடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக, நடிகர் ஈஸ்வரின் மனைவி நடிகை ஜெயஸ்ரீ, காவல் துறையில் புகார் அளித்ததோடு, ஈஸ்வர், தினமும் குடித்துவிட்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது மகளிடம் அவர் தவறாக நடந்துக் கொள்வதாகவும் புகார் அளித்தார்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட நடிகர் ஈஸ்வர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்த ஈஸ்வர், பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, மகாலக்ஷ்மியின் கணவருக்கும், ஜெயஸ்ரீக்கும் இடையே தவறான உறவு இருப்பதாக கூறியவர், தனக்கும், மகாலக்ஷ்மிக்கும் இடையே எந்தவிதமான தவறான உறவும் இல்லை, என்றும் கூறினார்.
மேலும், பணத்திற்காக தான் ஜெயஸ்ரீ இப்படி பொய்யான புகார் அளித்ததாக கூறினார். இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயஸ்ரீ, ஈஸ்வர் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக கூறினார்.
இந்த நிலையில், நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சித்திருக்கிறார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்கொலை செய்வதற்கு முன்பு, ஈஸ்வருக்காக ஜெயஸ்ரீ பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த ஆடியோ,